செய்திகள்

வேலூர் ஸ்ரீ நாராயணி ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் செவிலியர் கல்லூரி விளக்கேற்றும் விழா

Makkal Kural Official

வேலூர், டிச. 24–

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் விளக்கேற்றும் விழா இயக்குனர் என்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ரோகிணி தேவி, நடிகரும் வசனகர்த்தாவுமான மிர்ச்சி சிவா இணைந்து விளக்கேற்றி தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சி. நாராயணி நர்சிங் கல்லூரியின் 20 ஆம் ஆண்டிலும், டிப்ளமோ நர்சிங் கல்லூரியின் 18 ஆம் ஆண்டிலும் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் விளக்கேற்றும் விழா நாராயணி மகாலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 740 மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

சக்தி அம்மாவின் அயல் நாட்டு பக்தர் ரான் கிரீன், இம்மருத்துவ கல்லூரியின் அறங்காவலர் எம். கலை அரசு, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன், நிர்வாக அலுவலர் டாக்டர் மாதவி,மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் பிரபா செய்து இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *