வேலூர், நவ. 20:
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 58வது நூலக வார விழா சிறப்பாக நடைபெற்றது.
வட்ட தலைவர் வி.பழனி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பிரேமா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த சிறப்புமிகு விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற பேராசிரியை எம்.எஸ்.கலைச்செல்வி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும்,100 மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கி விழா சிறப்புறை ஆற்றினார்.
விழாவில் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், எஸ்.எஸ்.சிவ்வடிவு, ஆர்.விஜயகுமாரி, ஆறுமுகம், உள்ளிட்டோர் பங்கேற்கு வாழ்த்தி பேசினர்.பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.முடிவில் நூலகர் தி.மஞ்சுளா, எ.சத்யவாணி ஆகியோர் நன்றி கூறினர்.
![]()





