செய்திகள்

வேலூர் கருங்காலி ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் உமா ஆய்வு

Makkal Kural Official

வேலூர், ஜன. 4:

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளர் உமா அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்காலி ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.57,26,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு, சாலையின் நீளம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை மதிப்பீட்டில் உள்ளதா என அளந்து பார்த்து ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு அலுவலர் ச. உமா அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வேலூர் மாநகராட்சி, திருவலம் பகுதிகளில் சாலைபணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கருங்காலி ஊராட்சியில் ரூபாய் 51 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை ஆய்வு செய்தார். இச்சாலையின் மொத்த நீளம் 1130 மீட்டர் ஆகும். இச்சாலையின் அடுக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்காலி ஊராட்சியில் குட்டப்பள்ளி உக்கிரமத்தில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்திடவும் குளோரினேசன் செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூர் ஊராட்சியில் ரூபாய் 172 லட்சம் மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இணைப்பு சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, திருவள்ளுவர் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்சாலை அமைக்கும் பணி ஆய்வு செய்தார். இச்சாலை பணி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சங்கரன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மொத்த கொள்ளளவு 15 இலட்சம் லிட்டர் ஆகும் மேற்கண்ட நீர்த்தேக்க தொட்டியை சுத்தமாக பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மாநகராட்சி சூரியகுலம் மேட்டு முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணியை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவலம் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தார்சாலை விரிவுபடுத்தும் பணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சாலையின் மொத்த நீளம் 4.5 கிலோ மீட்டர் ஆகும் தற்போது 2025 26 ஆம் நிதி ஆண்டில் 2.6 கிலோமீட்டர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா உட்பட பலர் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *