வேலூர், டிச. 19:
வேலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இவ்விழாக்களில் கலெக்டர் சால்வை அணிவித்தும் பரிசு பொருள் வழங்கியும் சிறப்பிக்கப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கென நடத்தப்படும் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் இவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் குறைகள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட 21 மனுக்கள் மீது விவாதிக்கப்பட்டது. மொத்தம் 21 மனுக்களில் 11 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டது. 04 மனுக்கள் பரிசீலினையில் உள்ளது. 06 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் தொடங்க வங்கி கடன், அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 20 மனுக்கள் அளித்தனர். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடந்த குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் இலவச பேருந்து பயண அட்டை கோரி மனு அளித்த சுதந்திர போராட்ட தியாகியின் 2 வாரிசுதாரர்களுக்கு பேருந்து பயண அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
![]()





