செய்திகள்

வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்: புத்தாண்டு வாழ்த்து கூறினார் ரஜினி

Makkal Kural Official

சென்னை, ஜன. 1–

இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு 2026 பிறந்துள்ளது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டனர்.

ரஜினி வெளியே வர, கூடியிருந்த ரசிகர்கள் அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரஜினியும் உடனே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்தபிறகு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *