செய்திகள்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இ-பைலிங் கருத்துக்கேட்பு கூட்டம்

Makkal Kural Official

விழுப்புரம், ஜன. 5:

விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், இ–-பைலிங் (மின்னணு வழக்கு தாக்கல்) முறையை மேலும் எளிமைப்படுத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதியும், விழுப்புரம் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான ஆஷா கலந்து கொண்டு இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து வக்கீல்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

அப்போது, வக்கீல்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் தீர்வு வழிமுறைகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம், மின்னணு வழக்கு தாக்கல் முறையை மேலும் சீர்மையாக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *