செய்திகள்

விருப்பத்துக்கு ஏற்ப பேருந்துகளில் பயணம் செய்யும் ‘சென்னை உலா’: அமைச்சர் சிவசங்கர் துவக்கினார்

Makkal Kural Official

சென்னை, ஜன. 14–

போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” – விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை, இன்று சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். அதோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.

சென்னை உலா பேருந்து – “ஹாப் -ஆன் ஹாப் -ஆஃப்” சேவைகளுடன்முதன்முதலில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றனமேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும்இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னைவாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.

* பழங்கால, பாரம்பரியம் -1980களின் காலகட்ட பேருந்துகள் — சென்னையின் பொதுப் போக்குவரத்து பரிணாமத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் கூடிய ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (HO-HO)மாதிரி – அணுகல் மற்றும் வசதி உள்ளது.

* குறிப்பாக மகளிர்வயது முதிர்ந்தவர்கள்குழந்தைகள்பள்ளி குழுக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயக்கும்.

* இந்தப் பாரம்பரியப் பேருந்தில்மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒன் செயலி

சிறப்பு சேவைகள்:

சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50 மட்டுமே.

சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை மற்றும் நடத்துனரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் சொகுசுப் பேருந்துகட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.

16ந் தேதி முதல்

18ந் தேதி வரை

பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16–18 காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும். வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.

அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும். இனி வரும் விழாக்களிலும் இப்பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *