செய்திகள்

விஜய் தலைமையிலான ஆர்ப்பாட்டம்: பெண் தொண்டர்கள் பலர் மயக்கம்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 13

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நடத்தப்பட்டது. தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ எனப் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பெண் தொண்டர்கள் மயக்கம்

மேலும், ‘SORRY வேண்டாம் நீதி வேண்டும்.’ ‘உயிரின் மதிப்பு தெரியுமா… மன்னராட்சிக்குப் புரியுமா?’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில், சில தவெக பெண் தொண்டர்கள் சிக்கி மயக்கமடைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் உட்பட 5 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *