தமிழ்நாடு அரசியலின் மேடையில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்து இருக்க, புதிய அத்தியாயம் துவக்கும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சிக்கு, ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களால், ஒரு “மாஸ்டர் ஸ்ட்ரோக்” என மகிழ்கின்றனர்.
தேர்தல் ஆணையத்திற்கு அது ஒரு சின்னம், அவர்கள் பட்டியலில் உள்ள ஓர் இலவச அடையாளம். “Whistle Podu” என்ற கீதத்துடன் இணைந்த ரசிகர் வெறியாட்டம், விஜய் கட்சியினர் மத்தியில் துவங்கி விட்டது!
திரையரங்கின் முதல் நாள், முதல் காட்சியின் மகிழ்ச்சி குதூகலம் இந்த விசில், வாக்குப் பெட்டியின் முன் நிற்கும் வாக்காளர் கண்முன் எளிதில் அடையாளம் பெறும் ஒரு குறியீடு இந்த ‘விசில்’. இந்தச் சின்னம் தேர்தல் வரலாற்றில் பரிச்சயமான ஒன்றுதான்!
யார் யாருக்கு இந்த சின்னம்:
2019 இல் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட போது, விசிலை “அழைப்புக் கருவி” மட்டுமல்ல அல்ல; விசில் ஊதும் விசில் ப்ளோவர் என்ற கருத்துடன் ஊழலையும் கண்டு விசில் ஊதுவது என்ற அரசியல் உவமைக்குப் பயன்படுத்தினார்.
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியும் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய போது இதே விசில் தான் அவரது சின்னம். தேர்தலில் சின்னம் மிக முக்கிய அம்சம் என்பதை அறிவோம்! எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ‘இரட்டை இலை’யை வளமும் வெற்றியையும் குறிக்கும் அடையாளமாக மாற்றினர்.
அண்ணாவும், கருணாநிதியும் உதய சூரியனை கொண்டே திராவிட சிந்தனை என்ற அரசியல் மொழியை உருவாக்கினர். விஜயகாந்த் முரசையும், கமலஹாசன் டார்ச் லைட்டுடையும் பெற்று இருக்கின்றனர். அந்த வரிசையில் விசில் விஜய்க்கு விசில்!
தமிழ்நாட்டில் இன்னொரு பிராண்டும் நினைவுக்கு வருகிறது, Chennai Super Kings. “Whistle Podu” அந்த அணியின் அடையாளம். விளையாட்டு, சினிமா, அரசியல் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு கலாச்சார ஒலி இப்போது வாக்குச் சாவடியில் எதிரொலிக்கத் தயாராகி விட்டது!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாரம்பரிய பிரபல கட்சிகள் தங்களது அடையாளமாக இருக்கும் சின்னங்களுடன் வேரூன்றியிருக்க, புது வருகையான தவெக, கட்சிக்கு ஒரு சின்னத்தைப் பெற்றுள்ளது, அது “ஒலி நிச்சயம் உண்டாக்கும், வெற்றி சங்க நாதமாக மாறுமா? பொறுத்து இருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்!
![]()




