சென்னை, ஜன. 6:
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ந் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தணிக்கைக் குழு, இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. ஆனால் U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது. (12 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகள் பெற்றோர்களோடு தான் பார்க்க அனுமதி)
தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வெய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிது. இந்நிலையில் படத்திற்க தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கக் கோரி சென்னை ஐகோட்டில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை இன்று (செவ்வாய்) பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் வழக்கறிஞர், நீதிபதி பிடி ஆஷா முன்பு முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
UA சான்றிதழ்
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. 3 மணிநேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய ஜனநாயகன் திரைப்படத்தில் 10க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் உள்ளதாகவும் விஜயின் படங்களிலேயே அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக ஜன நாயகன் உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
“சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளனர். பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தை கடந்த மாதம் 19-ந் தேதி தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





