விக்கிரவாண்டி, நவ.18 –
விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர்.
செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 42, இவரது மகள் சூரிய பிரியா வயது 17. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் மகள் சூரிய பிரியாவை அழைத்துக் கொண்டு செஞ்சி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றார். கஞ்சனூர் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த லாரி இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
![]()





