வெள்ளி ஒரு கிராம் ரூ.148க்கு விற்பனை
சென்னை, செப். 22–
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 என உயர்ந்து, ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60ம், சவரனுக்கு ரூ.480 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் 82,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,360க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 நெருங்கியது. தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 காரட் சுத்த தங்கம் சவரன் ரூ.90,416க்கும், 18 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.68,640-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,48,000-க்கு விற்பனை ஆகிறது.
![]()





