செய்திகள்

வரலாறு காணாத உயர்வு: தங்கம் ஒரு சவரன் ரூ.76,960

Makkal Kural Official

சென்னை, ஆக. 30–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் சில நாட்களாக தங்கம் விலையில், ஏற்ற இறக்கம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,405 ரூபாய்க்கும் சவரன் 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 75,760 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. திடீரென நேற்று மதியம் மீண்டும், தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 9,535 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 76,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது.கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *