சென்னை, ஜன. 13–
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 900-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.220 உயர்ந்து கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் தங்கத்தை போலவே தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது.
ரூ.3 லட்சத்தை எட்டும் வெள்ளி
நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.275 ஆகவும், கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகவும் இருந்தது. இது நேற்று ரூ.12 அதிகரித்து கிராம் ரூ.287 ஆகவும், கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 87 ஆயிரமாகவும் இருந்தது.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,92,000க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.292க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கடந்த 3-ந்தேதி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இது கடந்த 11 நாட்களில் மட்டும் ரூ.35 ஆயிரம் உயர்ந்துள்ளது.
![]()





