சென்னை, ஜன. 20–
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில் அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கு விற்பனையானது.தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,610-க்கும் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 12,000 உயர்ந்து ரூ.3.30 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
![]()





