செய்திகள்

‘‘வந்தே பாரத் ரெயிலில் 180 கி.மீ. வேகத்திலும் குவலையிலிருந்து சிந்தாத தண்ணீர்’’:

Makkal Kural Official

மத்திய ரெயில்வே அமைச்சர் பெருமிதம்

புதுடெல்லி, டிச. 31–

“வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றபோதும், குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சிந்தாமல் இருப்பதை’’ மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்தோடு பகிர்ந்துள்ளார்.

பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் நாளை (ஜனவரி) 1ந் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:–

‘‘வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா முதல் நக்ரா இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்த நீர் சோதனை, புதிய தலைமுறை ரெயிலின் தொழில்நுட்ப அம்சங்களை நிரூபிக்கும் வகையில் உள்ளது’’

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *