மக்கள் குரல் பார்வையில்

வந்தவாசி: ஒரு சிறிய நகரம், ஒரு பெரிய வரலாறு

Makkal Kural Official

வந்தவாசி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும், காரணம். இந்திய வரலாற்றின் திசையைத் திருப்பிய ஒரு போர் நிகழ்ந்த மண் அது.

1760 ஜனவரி 22-ஆம் தேதி, வந்தவாசி அருகே பிரிட்டிஷ் படை சர் ஐயர் கூட் தலைமையில் மற்றும் பிரெஞ்சு படை கவுண்ட் டி லாலி தலைமையில் நேரடியாக மோதின. இந்த மோதல், பிரெஞ்சு ஆட்சியின் வீழ்ச்சிக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது.

இந்த வெற்றி, இந்தியாவில் பிரெஞ்சு அரசியல்–ராணுவ செல்வாக்குக்கு இறுதி மணி அடித்ததுடன், இந்திய முழுவதும் பிரிட்டிஷ் ஆதிக்கம் வேரூன்றுவதற்கான பாதையைத் திறந்தது.

இந்தப் போர் ஒரே நாளில் சில மணி நேரங்கள், சுமார் 4 மணி நேரம் மட்டுமே நீடித்தது. குறுகிய நேரத்திலேயே முடிவடைந்த இந்த மோதலில், பிரிட்டிஷ் படை தீர்மானமான வெற்றியைப் பெற்றது.

போரில் பிரெஞ்சு தரப்பில் சுமார் 700 பேர் உயிரிழந்தோ காயமடைந்தோ இருந்தனர், மேலும் சுமார் 1,000 வீரர்கள் கைதாக்கப்பட்டனர். பிரிட்டிஷ் தரப்பில் சுமார் 200–300 பேர் உயிரிழந்தோ காயமடைந்தோ இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் உறுதியாகத் தொடங்கியது, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் எதிர்காலம் அனைத்தையும் புதிய திசையில் நகர்த்திய வரலாற்றுத் திருப்புமுனை இந்நாளாகும். பின்னாளில் பல நூற்றாண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசுக்கான அடித்தளம், அன்று வந்தவாசி மண்ணில்தான் உறுதிப்படுத்தப்பட்டது.

பழமையான கோட்டை:

இன்றைக்கு அமைதியாக நிற்கும் வந்தவாசி மண், ஒருகாலத்தில் உலக அரசியல் முடிவுகளை நிர்ணயித்த போர்க்களமாக இருந்தது என்பதே அதன் பெருமை. மேலும் இங்கு 16-17 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கக்கூடிய பழமையான கோட்டை ஒன்று உள்ளது, இது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரி காத்த ஈஸ்வரன், ஆலவாய் சுந்தரேஸ்வரர் கோயில் போன்ற புராதனக் கோயில்கள் இப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன. இப்பகுதி ஆர்காட் நவாப், Carnatic Nawab, ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.

பிரெஞ்சு ராணுவ முகாம்கள் பாண்டிச்சேரியை தலைமையகமாக கொண்டு தென்னிந்தியாவின் பல முக்கிய இடங்களில் ஆட்சி செய்து கொண்டு இருந்தது. தற்போதைய மதராஸ், ஆர்காட், பாண்டிச்சேரி பாதையில் இருந்த வந்தவாசி நடுமைய பகுதியில் இருந்ததால் இப்படி ஒரு போரை சந்தித்தும் இருக்கிறது.

1750 களின் இறுதியில் பிரெஞ்சு தென்னிந்தியாவில் வலுவாக இருந்தனர் என்பதையும் மறந்து விடக்கூடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *