செய்திகள்

வடபழனி – காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரைப்பை, கல்லீரல் நோய் , சிகிச்சை பிரிவு துவக்கம்

Makkal Kural Official

சென்னை, டிச.18:

பல்துறை சிகிச்சையில் சென்னையின் முன்னணி மருத்துவமனையான வடபழனி காவேரி மருத்துவமனை, ‘காவேரி செரிமான மண்டல அறிவியல் மையம் என்றசிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சையை வழங்குவதோடு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும்.

மக்கள் தொகையில் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர், ஆனால் குறைவான நபர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், முறையற்ற உணவு நேரங்கள், நாள்பட்ட மன அழுத்தம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் போதுமான தூக்கமின்மை ஆகியவை இந்த கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன. தற்போது குடல் அழற்சி நோய் (IBD) மற்றும் குடல் செயல்பாட்டில் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன என்று காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் தெரிவித்தார்.

இத-ன் இயக்குநரும், இரைப்பைகுடலியல் இடையீட்டு சிகிச்சையில் முதுநிலை நிபுணருமான டாக்டர் பாண்டுரங்கன் பாசுமணி கூறுகையில்,* “செரிமானக் கோளாறுகள் இப்போது தனிப்பட்ட மருத்துவப் பிரச்சனைகளாக தனித்துப் பார்க்கப்படுவதில்லை. அவை, மக்களின் பரந்த வாழ்க்கை முறை மற்றும் பொதுச் சுகாதார சவால்களைப் பிரதிபலிக்கின்றன. முன்கூட்டியே நோயறிதல், சான்று அடிப்படையிலான இடையீட்டு சிகிச்சை மற்றும் நீண்ட கால அடிப்படையில் நோய் மேலாண்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதே எமது குறிக்கோளாகும் என்றார்.

மாறிவரும் நோய் முறைகள் குறித்து வடபழனி காவேரி மருத்துவமனையின் இரைப்பைகுடலியல் மருத்துவரும் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணருமான டாக்டர் டி.கே. ஆனந்த் பேசுகையில், “வாழ்க்கை முறை சார்ந்த அழுத்தங்கள் மற்றும் காலம் தாழ்த்தி தாமதமாக சிகிச்சைக்கு வருவதன் காரணமாக இளம் வயதினரிடையே இரைப்பை குடல் நோய்கள் அதிகரித்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *