செய்திகள் முழு தகவல்

வடசென்னையில் வேகமாக உருவாகி வரும் எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப் திட்டம்

Makkal Kural Official

சென்னை, டிச. 5:

எஸ்பிஆர் கட்டுமான நிறுவனத்தின் எஸ்பிஆர் சிட்டி திட்டம், உலகின் முன்னணி மாற்று முதலீட்டு நிறுவனத்தில் ஒன்றான ஓக்டிரி கேபிடல் நிறுவனத்திடமிருந்து ரூ.750 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. 209 பில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துகளை மேலாண்மை செய்யும் ஓக்ட்ரீயின் இந்த முதலீடு, சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப்–இன் வலுவான அடிப்படைகளில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

இந்த முதலீடு எஸ்பிஆரின் முக்கிய வணிகத் திட்டங்களுக்கு வேகத்தை கூட்டும், முக்கிய வர்த்தகத் திட்டங்களை வேகமாக நிறைவு செய்ய உதவும்:

மார்க்கெட் ஆஃப் இந்தியா மால் ஆஃப் மெட்ராஸ் இவை இரண்டும் சேர்ந்து சென்னையையும், தென் இந்தியாவின் முழு வர்த்தக மற்றும் ஷாப்பிங் சூழலையும் மறுபரிமாணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த முதலீடு, மொத்தம் 3.5 மில்லியன் சதுர அடியில் பரவிய வணிகச் சொத்துகளின் மதிப்பை உருவாக்கும். இதில்: மால் ஆஃப் மெட்ராஸ் — 6 திரை கொண்ட சினிமா மற்றும் 300+ பிராண்டட் ஸ்டோர்கள், மார்க்கெட் ஆஃப் இந்தியா — 3,000+ வணிக ஷோரூம்களில் வைரம் & நகை, எலக்ட்ரானிக்ஸ், பில்டிங் மெட்டீரியல், டெக்ஸ்டைல் அடங்கும்.

இறக்குமதி பொருட்கள், பேக்கேஜ்ட் உணவுகள், பலவகை வர்த்தக பொருட்கள் ஆகிய பிரிவுகளை இது உள்ளடக்கியது. இந்த முதலீடு அடுத்த 8–12 மாதங்களில் திறக்கப்படவுள்ள பிரிவுகளில் சிறிய பகுதியே ஆகும்.

மேலும், இந்த நிதி மூலம் திட்டத்தின் அல்டிகோ கேபிடல் நிறுவன கடனையும் முழுமையாக திருப்பிச் செலுத்த முடியும்.

இது தென் ஆசியா (சார்க் நாடுகள்) முழுவதும் மிகப்பெரிய மல்டி-கமாடிட்டி வர்த்தகம் ஷாப்பிங் இடமாக உருவாகின்றது.

சாதாரணமாக, ஒவ்வொரு 100 சதுர அடி வணிக இடமும், 1 நேரடி வேலை, 3 மறைமுக வேலைகள் உருவாக்கும்.

இதன் அடிப்படையில்: 3.5 மில்லியன் சதுர அடி கொண்ட மார்க்கெட் ஆஃப் இந்தியா மற்றும் மால் இணைந்து 35,000 நேரடி வேலை வழங்கும். 1 லட்சம் மறைமுக வேலை கிடைக்கும்.

இதனால், வடசென்னையை மட்டுமல்லாது முழு தென் இந்தியாவின் வர்த்தக, ரீடெயில், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு சூழலையும் மாற்றும் பெரும் சமூக-பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

ஓக்ட்ரீ முதலீடு ஆர்வம்

ஓக்ட்ரீ தனது முடிவை எடுப்பதற்கு முன் பல உலகளாவிய நிபுணர்களின் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது:

டிலாய்ட் – நிதி & வரி ஆய்வு அறிக்கை, ஏஇசட் பி பார்ட்னர்ஸ்– சட்ட & உரிமை, Knight Frank – தொழில்நுட்ப & செலவு, பிளான்மேக்ஸ் – மால் ஆலோசனை & சாத்தியக்கூறு வழங்கி உள்ளது.

இதன் முதலீட்டிற்கு காரணமான முக்கிய அம்சங்கள்:

வலுவான சொத்து பாதுகாப்பு மற்றும் உயர்ந்த விற்பனைத் தெளிவு, சென்னையின் மையத்தில் இருந்து 4 கிமீ-ல் உள்ள பேரம்பூர் மில் பகுதியின் வேகமான வளர்ச்சி மும்பையின் லோயர் பரேல் மாற்றத்தைப் போன்றது

உயரமான கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் திட்டங்களில் எஸ்பிஆர் நிறுவனத்தின் நிரூபிக்கப்பட்ட திறன்.

எஸ்பிஆர் ஏற்கனவே ஜேஎம் பைனான்சியல் ப்ரமல், எல்ஐசி ஹவுசிங் போன்ற நிறுவனங்களிடமிருந்தும் நிதி பெற்றது. எல்லா கடன்களும் திட்டத்தின் வலுவான வருவாய் காரணமாக முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் & வீடு வாங்குபவர்களிடையே இந்நிறுவனம் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் கூட்டாண்மை ஆகும்.

ஓக்ட்ரீயுடன் உள்ள இந்த கூட்டாண்மை, நிறுவனம் மீது நிறுவன முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வாடகையாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

55% க்கும் அதிகமான ரீடைல் இடங்கள் முன்பே லீஸ் செய்யப்பட்டுள்ளதால், குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், எஸ்பிஆர் சிட்டி வடசென்னையின் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருகிறது எஸ்பிஆர் சிட்டி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *