மாஸ்கோ, ஜூலை 11–
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வடகொரியாவுக்கு 2 நாள் பயணமாகச் செல்கிறார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வடகொரியாவுக்குப் புறப்படும் முன், மலேசியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, கடந்த ஜூன் 17 ந்தேதி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தார்.
வடகொரியாவுடன் உறவு உறுதி
அப்போது, ரஷ்யா-வடகொரியா உறவு வெறும் பேச்சளவில் இல்லாமல், செயல்பாடுகளிலும் உறுதியாக உள்ளது என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார். ஷோய்கு ஒரு மாதத்திற்குள் பியோங்யாங்கிற்கு இரண்டாவது முறையாகச் சென்றது, இந்த இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
கடந்த ஜூன் 2024-ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பியோங்யாங்கிற்குச் சென்று, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது, இருதரப்பு வர்த்தகம், காசன்-ராஜின் தளவாடத் திட்டம், கல்வி, விவசாயம், சுற்றுலா, மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





