சென்னை, ஜன. 2- கடலில் வருகின்ற ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 2வது வாரத்தில் கனமழை பெய்ய கணிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளதாக
தமிழகத்தில் பருவமழையானது வடகிழக்கு வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், இயல்பைவிட 3 குறைவாகவே வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது. சதவீதம்
இந்த நிலையில் லட்சத்தீவு குமரிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் நேற்றுமுதல் தமிழகம், புதுவையில் சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் வாய்ப்பு குறைவு என்றும், புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி தமிழகத்தில் கடந்த நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனா அணையில் 23 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 21 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.சிவகிரியில் 17 செ.மீ., வீரபாண்டி தேனி, ராமநதி அணை 12 செ.மீ., கோத்தகிரி 11 .., சேரன்மாதேவி, ஆயிக்குடி – 10 செ.மீ., அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, சேர்வலார் அணை, அடார் எஸ்டேட் 9 செ.மீ., பில்லூர் அணை 8 செ.மீ. மழை பெய்தது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தென்காசி மாவட்டம்
மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு
மாவட்டம், உள்ள திருநெல்வேலி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் களக்காடு அருகே திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியிலும் குளிக்கத் தடைமேற்கு தொடர்ச்சி பகுதியில் பெய்து மலைப் காரணமாக, வரும் கனமழை மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
![]()





