அவிநாசி, நவ. 16–
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆம்னி பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர், கேரள மாநிலம் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நியூ திருப்பூர் அருகே இன்று அதிகாலை சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் 6 பேருக்கு கை, கால்கள் முறிந்து, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()





