கதைகள் சிறுகதை

லாயிட்ஸ் சாலை..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

“இப்ப இருக்கிற அரசியல் எப்படி இருக்குன்னு நினைக்கிற?

என்று கணேசன் கேட்க

“அக்கரைக்கு இக்கரை பச்சை தான். எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டை தான் “

என்று வாசு சொல்ல

” நீ சொல்றதும் சரிதான். அவங்க ஆட்சிக்கு வந்தா, இவங்களத் திட்டுறாங்க. இவங்க ஆட்சிக்கு வந்தா அவங்களத் திட்டுறாங்க. இது தான் அரசியல். நாட்டுக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு யாரும் சொல்றதில்ல அவங்க அவங்க புகழ் பெறணும் சம்பாதிக்கணும்னு தான் ஆசைப்படுறாங்க. யாரும் மக்களுக்குச் சேவை செய்யணும்னு நினைக்கல என்று கணேசன் சொல்ல

அந்த இடமே அரசியல் அரங்கமாக மாறியது. பேசிக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார், வாசு.

“தீப்பெட்டி இருக்கா? ” என்று வாசுவிடம் பிரபு கேட்க, எதுவும் பேசாமல் தன் பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொடுத்தார், வாசு.

‘சர்’ என்று உரசிய பிரபு சிகரெட்டைப் பிடித்துக் கொண்டே

” எதுக்குப்பா நமக்கு அரசியல். காலையில வேலைக்குப் போயிட்டு நைட்டு வந்தா தான் நம்ம வீட்டுல ஒலைக்காயும். இந்த அரசியலப் பேசி நமக்கு என்ன நடக்க போகுது? என்று சண்முகம் சொல்ல

” ஒவ்வொரு மனுஷனும் அரசியல் பேசணும். அரசியலுக்குள்ள தான் நாம இருக்கிறோம். அரசியல் தான் நம்மள ஆட்டி வைக்குது. நீங்க வேண்டாம்னு சொன்னாலும் அரசியல் உங்களை விடாது. உங்களுக்குள்ள அரசியல் இருந்துகிட்டுத் தான் இருக்கும். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் நாம நின்னுப் பேசிக்கிட்டு இருக்கிற இடம் என்னென்னு தெரியுமா? என்று வாசு கேட்க

“இது லாயிட்ஸ் சாலை. இப்போ இந்தச் சாலை அவ்வை டி.கே.சண்முகம் சாலைன்னு மாற்றம் செய்யப்பட்டு இருக்கு. என்னதான் பேரு மாத்தினாலும் பழைய பேரு மறஞ்சு போகுமா என்ன? எனக்குத் தெரிஞ்சது இது லாயிட்ஸ் சாலை தான்” என்று சண்முகம் சொல்ல

“நாம அரசியல் பேசுறதுக்கும் இந்த லாயிட்ஸ் சாலைக்கும் ஒரு வரலாறும் ஒற்றுமையும் இருக்கு என்று வாசு சொல்ல

” என்ன வரலாறு? “

” லாயிட்ஸ் சாலைன்னு மட்டும் தான் எனக்குத் தெரியும். மத்தபடி எதுவும் தெரியாது” என்று கணேசன் சொல்ல,

“பிரிட்டிஷ் அதிகாரியான லாயிட்ஸ் ஜார்ஜ் லைட் அப்படிங்கறவருடைய பேர்ல தான் லாயிட்ஸ் சாலை இருக்கு. இவர் 1879 —-– -1941 வரை வாழ்ந்த ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி. வங்காள மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். இந்திய சிவில் பணியாளர் 1906 லிருந்து 1910 வரைக்கும் மெட்ராஸ் மாநகராட்சியில் தலைவராக இருந்தவர் .மெட்ராஸ் பிரசுரத்தில் வருவாய் செயலாளர் நிதிச் செயலாளர். 1923 சிறிது காலம் மெட்ராஸ் மாநகரத்தின் தலைமைச் செயலாளராகவும் இருந்தவர். அப்படிப்பட்டவர் பேரத் தான் லாயிட்ஸ் சாலைக்கு ஸ வச்சிருக்காங்க .அது பரவாயில்ல இது லாயிட்ஸ் சாலையுடைய வரலாறு .ஆனா நாம பேசுற அரசியலுக்கும் இந்த லாயிட்ஸ் சாலைக்கும் ஒரு பெரிய பொருத்தம் இருக்கு. “

“.அப்படியா ? “

“என்ன பொருத்தம்?” என்று கணேசன் கேட்க

” இந்தச் சாலை, ஒரு காலத்துல அரசியல் பண்பாட்டுத் தீவிர குறையாம இருந்திருக்கு. அதுக்கு இடம் கொடுத்தவர் ஏவி ராமன். இவர் சுதந்திரப் போராளி. ராஜேந்திர பிரசாத் வித்தல் பாய் பட்டேல், ஜமுனா லால் பஜாஜ், சங்கர்லால் பேங்கர் ஆகியோருக்குத் தங்குமிடமாக தன்னுடைய இல்லத்தை திறந்து வச்சவர் .ஏ வி ராமன் அவருடைய மகன் வி.பி. ராமன் இந்த இடத்திற்கு திராவிட இயக்க வாசலைத் திறந்து வைத்தார். அங்க தான் அண்ணா, கருணாநிதி, சம்பத், செழியன் மதியழகன், நெடுஞ்செழியன் எம்ஜிஆர், நடராஜன்ன திராவிட இயக்க தலைவர்களை இங்கே வரவச்சு இவங்க தான் கலந்துரையாடி இருக்காங்க.

” , அப்படியா? “

” ஆமா. ” 1923 ஏப்ரல் 26 ஆம் தேதி, இந்த இடம் சென்னை ராயப்பேட்டை பகுதியில் லாயிட் சாலை மற்றும் உயர்நிலைச் சாலை சந்திப்பில் இருக்கு. அந்தக் காலத்துல சுமார் அரை ஏக்கர் அளவு நிலம் இருந்திருக்கு. இந்த இடத்தை வாங்கியவர் விவசாயி மகனான ஏ.வி. இராமன் .இவர் லண்டன்ல படிச்சு, சுகாதாரம் மற்றும் பொறியாளராக இருந்தவர். அவரது நண்பர் தான் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரிங்கிற. ராஜாஜி அவரை அப்ப இருந்த மதராசப்பட்டினம் மாநகராட்சி வேலைக்குச் சேர்த்து விட்டார். இங்கே ஒரு பெரிய நாகலிங்க மரம் இருந்திருக்கு .ஒரு அழகான மத்திய மண்டபம். கடற்கரை வரை நீண்ட விவசாய நிலங்கள். தேங்காய் மற்றும் வாழைத்தோட்டம் இருந்திருக்கு.

” என்னாங்க, லாயிட்ஸ் சாலை பெரிய அரசியல் இடமா இருக்கும் போல”

” ஆமா, லாயிட்ஸ் சாலை ஒரு அரசியல் வரலாற்று இடம் மட்டுமில்ல. பழமையான சென்னை நகரத்தின் கலாச்சார அடையாளமாகவும் இருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம் சென்னை திரைப்பட ஊடகம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றின் புகழ் வாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய நபர்கள் இந்த லாயிட்ஸ் சாலையில் தான் இருந்திருக்கிறாங்க. 1930ல லாயிட்ஸ் சாலை வரைபடத்தைப் பார்த்தா, சுமார் 50 வீடுகள் மட்டும் தான் இருந்திருக்கு. ஆனா ஒவ்வொரு வீடும் பெரிய பெரிய பரப்பளவு கொண்டது . இங்க தான் காங்கிரஸ் அலுவலகம். முக்கிய அரசியல் கூட்டங்கள். தேர்தல் பிரச்சாரம் நடந்திருச்சி. இங்க தான் எம்ஜிஆரும் குடியிருந்ததா சொல்றாங்க” என்று வாசு சொல்ல

” இங்க ஒரு யூதக் கல்லறையும், அது மட்டுமல்ல சீனக் கல்லறையும் இருந்ததாம். 1968ல அரசு பள்ளி தொடங்குறதுக்கு அத இடிச்சிட்டதாகச் சொல்றாங்க ” என்று சண்முகம் கேட்க

“ஆமா. உண்மை தான் “

” இப்ப நாம அரசியல் பேச வேண்டாமா? சொல்லுங்க” வாசு கேட்க

” அரசியல் நமக்கு எதுக்குன்னு சூப்பரா சொன்னதுக்கு, லாயிட்ஸ் சாலையோட வரலாறையும் அந்தச் சாலையில நடந்த அரசியல் கூட்டங்களையும் சொல்லிட்டிங்க நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கு தலையே கிறுகிறுன்னு சுத்துது வாங்க சூடா ஒரு டீ குடிச்சிட்டு வந்து மறுபடியும் அரசியல் பேசலாமா?” என்றார் சண்முகம்

” சரி வாங்க டீ குடிச்சிட்டு வரலாம்” என்று அத்தனை பேரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பழைய லாயிட்ஸ் சாலை என்ற, தற்போதைய அவ்வை சண்முகம் சாலையில்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *