செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடியில் ஹிட்டாச்சி நிறுவன விரிவாக்கத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்:

Makkal Kural Official

சென்னை, அக்.16-

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

5 வருடங்களில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண்ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச்செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வேணு நுகரி மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *