கோவை, ஜூலை 18–
கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இநந்து சமய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் இந்திரா (54). சூலூர் பாப்பம்ப்ட்டி பகுதியில் உள்ள தனியார் கோவிலில் அதிக வருவாய் வருகிறது. ஆனால் அந்த கோவிலில் முறையான நிர்வாகம் இல்லை. அக்கோவிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ்குமார், இந்திராவிடம் மனு அளித்தார். அக்கோவிலை இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தங்களால் தர இயலாது என்று கூறிய நிலையில், 2 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். கடைசியில் 1.50 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார் ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுரேஷ்குமார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய, ரூ.1.50 லட்சத்தை, இந்திராவிடம் சுரேஷ் வழங்கினர். அப்போது மறைந்து இருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய, இந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
![]()




