செய்திகள்

ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்கும் இந்தியா

Makkal Kural Official

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி, ஜூலை.4-–

ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியா வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய முப்படைகளை வலுப்படுத்த மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் 10 மிகப்பெரிய கொள்முதல் பரிந்துரைகளுக்கு ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கெள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த தளவாடங்கள் அனைத்தும் உள்நாட்டில் இருந்து வாங்கப்படும். இந்த கொள்முதல் திட்டத்தில் முக்கியமாக, கடல் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் 12 அதிநவீன கப்பல்கள் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்கப்படுகின்றன. இந்திய கடற்படையில் இதுவரை இந்த கப்பல்கள் இல்லாத நிலையில், முதல் முறையாக இவை இந்தியாவில் தயாரித்து இணைக்கப்படுகின்றன. இதைத்தவிர கவச மீட்பு வாகனங்கள், எலக்ட்ரானிக்தள வாடங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் முப்படைகளுக்காக வாங்கப்படுவதாக ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *