செய்திகள்

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் புதிய வேட்டி-சட்டைகள் அறிமுகம்:

Makkal Kural Official

இன்று முதல் சலுகை விலையில் விற்பனை

திருப்பூர், ஜன.1-–

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு சலுகை விலையில் பெரியவர்கள், சிறுவர்களுக்கான வேட்டி-சட்டைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் திருப்பூரில் நேற்று அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், கே.ஆர்.நாகராஜனின் பேரன்கள் ஆரவ், ஆதவ், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வக்குமார், கணபதி ஆகியோர் உடன் இருந்தனர். புதிய வேட்டி-சட்டைகள் அறிமுகம் குறித்து கே.ஆர்.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசால் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி வேட்டி தினமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. அடுத்த தலைமுறையினரும் வேட்டி கட்டுவதை ஊக்கப்படுத்தவும், வேட்டி கட்டாதவர்களையும் வேட்டி கட்டுவதற்கு தூண்டும் வகையில் விதவிதமான வேட்டி-சட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி, வேட்டி வாரத்தை முன்னிட்டு பெரியவர்களுக்கு ரூ.695 மதிப்பில் ‘கல்ச்சர் கிளப்’ கலர் சட்டையுடன் வேட்டிகள், சிறுவர்களுக்கு ரூ.495-க்கு லிட்டில் ஸ்டார் கலர் சட்டைகள் மேட்சிங் பார்டர் வேட்டிகள் அறிமுகம் செய்துள்ளோம். ராம்ராஜ் ஷோரூம் மற்றும் டீலர்கள், ஜவுளிக்கடைகளில் இந்த வேட்டி, சட்டைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் கிடைக்கும்.

இதுதவிர பெரியவர்களுக்கு ரூ.595-க்கும், சிறியவர்களுக்கு ரூ.395-க்கும் தங்கநிற பார்டர்களுடன் வேட்டி-சட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சலுகை விலையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *