செய்திகள்

ராமநாதபுரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

Makkal Kural Official

ராமநாதபுரம், ஆக. 17–

வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நேற்று முன் தினம் இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ரெயிலை விட்டு கிழே இறங்கி வந்து, தூங்கி கொண்டிருந்த கேட் கீப்பர் ஜெய்சிங்கை எழுப்பி கேட்டை மூடும்படி தெரிவித்தார். இதையடுத்து கேட் மூடப்பட்ட பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததாலும்,

ரெயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில் கடக்கும் போது கேட் மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்டதாக வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *