செய்திகள்

ராணிப்பேட்டை சியாம்பாடியில் புதிய ரேஷன் கடை: அமைச்சர் காந்தி திறந்தார்

Makkal Kural Official

ராணிப்பேட்டை, டிச. 30:

கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திமிரி ஊராட்சி ஒன்றியம், ஆயிரமங்கலம் ஊராட்சி சியாம்பாடி கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.19.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி ஊராட்சி ஒன்றியம், ஆயிரமங்கலம் ஊராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 2 வளர்ச்சி திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *