ராணிப்பேட்டை, நவ. 28:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சக்கரமல்லூர் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. மாவட்டத்தில் விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையிலான இத்திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அரசுக்கு இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். நீரோடை வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களுக்கு செல்ல வழி இல்லாமல் பிரச்சினை நிலவுவதாக விவசாயி தெரிவித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றிட கோரிக்கை வைத்தனர். நீர்வளத்துறையின் பொறியாளர்கள் இதனை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்
செங்காடு ஊராட்சி தகரகுப்பம் கால்வாய் கடந்துதான் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும். கால்வாய் பாலம் வேண்டி கோரிக்கை வைத்து நிலுவையில் உள்ளது. உடனடியாக நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கான சாத்தியக் கூறுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அமைக்க ப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். கார்த்திகை பட்டம் நடவு ஆரம்பித்துள்ளது கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா, பொட்டாஷ், டி ஏ பி தட்டுப்பாடு உள்ளது. இவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை வைத்தனர். தற்போதைய நிலையில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் போதிய அளவு இருப்பு உள்ளது. இருந்தபோதிலும் இவை கண்காணிக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார். அதேபோல உரக்கடைகளில் உரங்கள் வாங்கும் பொழுது கலப்பு உரம் கட்டாயம் வாங்க வேண்டுமென கடை உரிமையாளர்கள் சொல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது போன்ற புகார்கள் விவசாயிகள் தெரிவித்தால் கடையின் உரிமம் ரத்து செய்யலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது போன்று பல்வேறு கோரிக்கைகளை விவசாய நிலம் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர் கூறிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) செல்வராஜு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) சிந்தியா, துணைப்பதிவாளர் மத்திய வங்கி கோகிலா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
![]()





