ராணிப்பேட்டை, நவ. 20:
ராணிப்பேட்டை அருகே புதிய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது எதிரே அதிவேகமாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ் (20), சாஜன் (26) பாலமுருகன்(19) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()




