சென்னை, அக். 12–
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உயிரிழந்த உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, ரவுடி நாகேந்திரன் இன்று காலை உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வியாசர்பாடி உள்ள அவரது வீட்டிற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நாகேந்திரன் உயிரிழந்துள்ள நிலையில் சிறையில் இருந்த அவரது மூத்த மகன் அஸ்வத்தமன் தற்பொழுது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே அவரது 2வது மகன் அஜித் குமார் திருமணம் செய்துகொண்டார். அஜித் குமார் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஷகினா என்ற பெண்ணுக்கு தாலி கட்டினார். நாகேந்திரன் உடல் முன்பு இருவரும் மாலை மாற்றி கொண்டனர்.
மாலை மாற்றி கொண்டனர். அவர் தாலி கட்டிய அந்த சமயம் அருகாமையில் இருந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சோகத்தில் கண்கலங்கியப்படி அர்ச்சனையை தூவினர். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
![]()





