செய்திகள்

ரயில் பயணிகள் இன்று முதல் ஆதார் இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்

Makkal Kural Official

சென்னை, அக். 1–

ரெயில்களில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண் கட்டாயம் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

இன்று முதல் முன்பதிவுக்கான நேரம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகளை கொண்ட பயணிகள் மட்டுமே இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதாவது எந்த ஒரு ரயிலுக்கும் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும்.

ஆதார் இணைப்பு இல்லாதவர்கள், இந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. அதே நேரம், நேரடியாக ரயில் நிலையம் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த மாற்றமும் இல்லை. பொது முன்பதிவுக்கான 10 நிமிடம் நேரக்கட்டுபாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை.

இதற்கு முன்னர் இத்தகைய கட்டுப்பாடுகள் என்பது தட்கல் முறையில் முன்பதிவு செய்பவர்களுக்கு இருந்தது. ரயில் டிக்கெட்டுகளில் முன்பதிவின் போது ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவே இந்த நடைமுறையை மத்திய ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *