செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

சென்னை, நவ. 13–

நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் மூலம் நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *