செய்திகள்

மொரிஷியஸில் ‘அகர்வால்ஸ்’ விழிப்படல சிறப்பு சிகிச்சை மையம்

Makkal Kural Official

சென்னை, டிச. 12:

மொரிசியஸ் நாட்டில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் விழிவெண்படல மாற்று சிகிச்சை மற்றும் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் தரம்வீர் கோகுல் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் இந்திய தூதர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழும தலைவர் டாக்டர் அமர் அகர்வால், முதன்மை வணிக அதிகாரி டாக்டர் ஆஷார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் தரம்வீர் கோகுல் கூறுகையில், ‘இத்தகைய சிறப்பான மருத்துவ மையங்கள் தொடங்கப்படுவது இந்நாட்டின் கண் மருத்துவத் துறையை வலுப்படுத்தும் என்றார்.

டாக்டர் அமர் அகல்வால் பேசுகையில், விழி வெண்படலங்களில் ஏற்படும் காயம், தழும்புகள், கெரட்டோகோனஸ் எனபுனும் கூம்பு விழிப்படலம் மூலம் ஏற்படும் பார்வை இழப்பை உறுப்பு மாற்றும் சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியும். கண்ணின் கருவிழி பாவையை (பாப்பா) சீராக்கி அப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

அதன்படி விழி வெண்படலத்தை சரி செய்து ஒளிப்பிறழ்வு பாதிப்பை தடுக்கும் வகையில், ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ என்ற சிகிச்சை முறை மூலம் சரி செய்யலாம். அந்த சேவை தற்போது மொரிசியஸ் நாட்டில் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *