சென்னை, ஜூலை 10–
மெரினா நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (11–ந் தேதி) முதல் 31–ந் தேதி வரை (20 நாட்கள்) இயங்காது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு- 114க்கு உட்பட்ட மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ. பேக்வாஷ் குழாய் (Backwash Pipe) அமைத்தல், 1.80 மீ. விட்டம் கொண்ட 9 ஊறுகுழிகள் (Soak Pits) பொருத்துதல், சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் பணிகளுக்காக மெரினா நீச்சல் குளம் 11–ந் தேதி) முதல் 31–ந் தேதி வரை (20 நாட்கள்) இயங்காது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
![]()





