செய்திகள்

மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Makkal Kural Official

சென்னை, டிச. 25:

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜனவரி 1 முதல், தலைமைச் செயலர் அந்தஸ்து பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *