மெக்சிகோ சிட்டி, டிச. 29:
மெக்சிகோவில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இன்டர்ஓஷெனிக் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பசிபிக் பெருங்கடலுடன் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கிறது. இந்த ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு உதவ கடற்படைச் செயலாளரும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .
![]()





