செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு; திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும்: ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, அக். 10–

நாளை மறுநாள் திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்த பாடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும். நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும் தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.எ னவே, தற்போது தேர்வை தள்ளிவைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று கூறி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திட்டமிட்டமிடி 12–ந் தேதி தேர்வு நடைபெறும் என்பது உறுதியானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *