செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

Makkal Kural Official

சென்னை, டிச. 23–

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் மற்றும் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.சமீபத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்கு எதிராக ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். பாஜக அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *