செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 31–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சரின் சகோதரர் மு.க.முத்து மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, தே.மு.தி.க. நிர்வாகிகள் சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் அண்ணா தி.மு.க.வுடன் இணைந்து தே.மு.தி.க போட்டியிட்ட நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பையும் தே.மு.தி.க. வெளியிடாமல் இருக்கின்றது.

இதனிடையே, தே.மு.தி.க.வுக்கு அண்ணா தி.மு.க. மாநிலங்களவை சீட் கொடுக்காததால் அதிருப்தியில் உள்ள பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *