சென்னை, ஆக.2–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட்– 1) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 9,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 73,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது.
![]()





