செய்திகள்

மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு சான்றிதழ் : விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

Makkal Kural Official

விழுப்புரம், டிச. 12:

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:

முதலமைச்சர் மற்ற துறைகளை காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, நவீன கைப்பேசி, மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், முடநீக்கு சாதனம், செயற்கை கால் மற்றும் செயற்கை கை, நவீன செயற்கை கால் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. பார்வையற்றோருக்கு பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல், காதுகேட்கும் கருவி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் முழுமையாக பொறுப்பு எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அந்த வகையில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், மறுவாழ்வு இல்லங்கள், சிறப்பு கல்வி, கல்வி உதவித்தொகை, மின்னணு உபகரணங்கள், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள், சிறப்பு உதவி உபகரணங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நலவாரிய நிதியுதவி திட்டங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாகவும், பிற அரசு துறைகளின் வாயிலாகவும் பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளார். அதன்படி ரூ.1000 முதல் ரூ.7,000 வரை உதவித்தொகை பெற்று வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தற்போது ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை பாராட்டி பராட்டு சான்றுகள் மற்றும் பாிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அவர்களின் திறமைகளை வௌிபடுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குடிமை மருத்துவர் ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பொருப்பாளர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்களையும், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *