செய்திகள்

மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்: ஜனாதிபதி அறிவிப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 13–

மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.

அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்து கவுரவித்து வருகிறது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அந்த பட்டியலில் உள்ளவர்கள் ராஜ்யசபா எம்.பி.யாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.

அவர்கள் ராஜ்யசபா தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்பர். தற்போது 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார்.

அதன் விபரம் வருமாறு:–

* மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை அரசு தரப்பில் முன் நின்று நடத்திய வக்கீல் உஜ்வல் நிகம்.

* கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர்.

* முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா.

* வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *