செய்திகள்

மரத்தில் கார் மோதி விபத்து: 4–ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

Makkal Kural Official

தூத்துக்குடி, நவ. 19:

தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களான முகிலன் (வயது 23), ராகுல் ஜெபஸ்டின், சாரூபன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.

மேலும் கிருத்திக்குமார், சரண் ஆகிய 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூக்கக் கலக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது அதிவேகத்தில் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *