சென்னை, ஜூலை 29–
எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்த ஒரே தலைவர் தமிழக அரசியல் களத்தில் எடப்பாடி ஒருவர் தான் என்று அமைச்சர் காட்டமாகத் தாக்கினார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் வெற்றியை சந்தித்தது.
இந்த வெற்றிகள் அனைத்துமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறம்பட செயல் தன்மை உள்ள ஒரு ஆட்சி என்பதற்கு மக்கள் அளித்த சான்றாகவே நாங்கள் பார்க்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் மாத்திரம் அல்லாமல் அவற்றில் இல்லாத பல நல்ல திட்டங்களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி இருக்கின்றார் என்று எடப்பாடிக்கு பதில் கொடுத்தார்.
ஆகவே, மக்கள் 2026 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வரை அரியணையில் அமர்த்துவார்கள். கலைஞர் தான் தஞ்சை பெரிய கோயிலுக்கு 1000 ஆண்டு விழாவை எடுத்தவர். முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் ஆன்றோர், சான்றோர் பெருமக்கள், சித்தர்கள் ஆகியோருக்கு விழா எடுக்கின்ற அரசு இந்த அரசு.
ஆகவே அறியாமையில் பேசுகின்ற விஜய்க்கு பதில் கூறிக் கொண்டிருப்பதற்கு நேரம் போதவில்லை. பாஜக வேண்டும் என்றால் அந்த நாடகத்திற்கு துணை போகலாம். இவருக்கு தந்திருக்கின்ற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு பயன்படுகின்றன. இது நாடகமா அல்லது அது நாடகமா என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
ரூ.10,000 கோடி
நஷ்டம் வந்தாலும்…
நேற்றைய முன்தினம் பிரதமர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகைதந்த போது முதலமைச்சர் வைத்த கோரிக்கையில் பிரதானமான கோரிக்கையே இரு மொழிக் கொள்கையே எங்கள் கொள்கை. தேசிய கல்விக் கொள்கைளையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதனை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கல்வித்துறை கண்டித்து கொண்டிருக்கின்றது.
இவ்வளவு கண்டனத்திற்கு பிறகும் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். எங்கள் முதலமைச்சர் இரு மொழி கொள்கைக்காக 10,000 கோடி நஷ்டம் என்றாலும் அதை ஏற்று கொண்டு சமாளிப்பதற்கு தமிழக அரசு தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
மத்திய அரசுக்கு
துதி பாடுபவர்கள்
மத்திய அரசுக்கு துதி பாடுகின்றவர்கள் இதுபோன்ற நிதியை பெற்று தருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அன்பு சகோதரர் திருமாவளவன் கொள்கை பிடிப்போடு இருக்கின்ற ஒரு தலைவர். எந்த சூழல் வந்தாலும் அண்ணன் தளபதியை விட்டு அவர் நகர மாட்டார். டிடிவி தினகரன் கடந்த காலத்தில் அவர்தான் முதல்வர் என்று கூறி சுற்றிக் கொண்டிருந்தார். அதிலிருந்து பின்வாங்கியதற்கு வாழ்த்துகள்.
ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கில் மடியிலே கனமில்லை என்றால் வழியிலே பயமில்லை என்று நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி அவர் நிரபராதி என்று நிரூபிக்கட்டும். அவர் ஜாமீன் கோரிய அனைத்து இடங்களிலும் மறுக்கப்பட்டிருக்கின்றது. கடைசியாக அவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற தான் ஜாமீன் பெற வேண்டிய சூழ்நிலை. ஆகவே அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கில் நியாயமான குற்ற முகாந்திரம் இருப்பதால்தான் எளிதில் அவருக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை’’.
இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சேகர்பாபு கூறியிருப்பதாவது:–
தமிழிசை சௌந்தரராஜன் தங்கள் முதுகை அவர்கள் திரும்பிப் பார்த்துக் கொள்வதில்லை. அவரின் தகப்பனார் குமரி அனந்தன் உடல்நலம் குன்றியிருந்தபோது எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையிலும், பின்னர் சூர்யா மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உறவினரான வசந்தகுமார் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, தனியார் மருத்துவமனையில் தானே சிகிச்சை பெற்றார். இதையெல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார். ஏன் அவருடைய கணவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுபோன்று தனியார் மருத்துவமனையை தான் நாடுகிறார்கள்.
நாகரீக அரசியவாதிக்கு
அப்பாற்பட்டவர்…
அதில் பொதுமக்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் இப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே தமிழிசை போன்ற நாகரீக அரசியல்வாதிகள் என்று எங்களுடைய பட்டியலில் வைத்திருந்தவர்களை இதுபோன்ற கேள்விகளால் அந்த நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற பட்டியலில் திராவிட முன்னேற்ற கழகம் அவரை கருதும்.
ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைபாடு மாறி மாறி பேசுவது தான். பார்த்தாலே பெரிய பாக்கியம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியவர், பார்க்கவில்லை என்ற கோபத்திற்காக தற்போது தான் ஞானோதயம் பிறந்து ஒன்றிய அரசு எதிர்க்க துவக்கி இருக்கிறார், இந்த எதிர்ப்பு நியாயமான முறையில் இருந்தால் நாங்களும் அதை வரவேற்போம்.
ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கில் மடியிலே கனமில்லை என்றால் வழியிலே பயமில்லை என்று நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி அவர் நிரபராதி என்று நிரூபிக்கட்டும். அவர் ஜாமீன் கோரிய அனைத்து இடங்களிலும் மறுக்கப்பட்டிருக்கின்றது. கடைசியாக அவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற தான் ஜாமீன் பெற வேண்டிய சூழ்நிலை. ஆகவே அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கில் நியாயமான குற்ற முகாந்திரம் இருப்பதால்தான் எளிதில் அவருக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை’’.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





