செய்திகள்

மதுரை – தூத்துக்குடி 4 வழி சாலையில் லாரியும் வேனும் மோதல்: 3 பேர் பலி

Makkal Kural Official

விருதுநகர், ஜூலை 10–

அருப்புக்கோட்டை அருகே லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் மற்றும் கிளீனர் என 3 பேர் உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி 4 வழிச் சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

3 பேர் பலி

இந்த விபத்தில் 2 வாகனங்களின் ஓட்டுநர்களும், மற்றும் ஒரு கிளினர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் அல்லது மேலும் தனிப்பட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த வாகனங்கள் இரண்டும் கனரக வாகனங்கள் என்பதால், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், அருப்புக்கோட்டை காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், விபத்தின் காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *