செய்திகள்

மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

Makkal Kural Official

கிருஷ்ணகிரி, ஆக. 19–

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மதுரையிலிருந்து நேற்றிரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி மறுகரையில் உள்ள சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழந்து உருண்டு விழுந்தது.

இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *