செய்திகள்

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை

Makkal Kural Official

வேதாரண்யம், ஆக. 18–

வேதாரண்யம் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி இயந்திர உரிமையாளர் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்மானுவேல் அங்கிருந்த இருந்த மண்வெட்டியால் குமாரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமார் ரத்து வெள்ளத்தில் கிழே விழுந்து இறந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் போலீசார் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *