செய்திகள்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.55 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம்: அமைச்சர் சேகர்பாபு திறந்தார்

Makkal Kural Official

சென்னை, ஜன. 22–

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.54.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள்முதல் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 35 அன்னதானக் கூடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாநகராட்சி உறுப்பினர் வெ.பரிமளம், அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.வெங்கட கோபாலகிருஷ்ணன், அறங்காவலர்கள் எம்.கேஆர். மெய்யப்பன், ஆர்.மலர்செல்வி, எ.ரமேஷ்குமார், ஆர்.சோழன், செயல் அலுவலர் வீ.முத்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *